காப்பீட்டு பாலிசி மீது கடன் வாங்குவது சுலபமான செயல்முறையாகும். காப்பீடு எடுத்த பாலிசிதாரர்கள் தங்கள் எல்ஐசி பாலிசியை பிணையமாகப் பயன்படுத்தி கடனைப் பெறலாம்.
குறைந்த கிரெடிட் மதிப்பெண்கள் அல்லது வங்கிகளில் கடன் பெறுவதில் சிரமம் உள்ளவர்களுக்கு எல்ஐசி பாலிசி மீது கடன் வாங்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எல்ஐசி தவிர, ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு எதிராக கடன்களை வழங்கும் பிற கடன் வழங்குநர்களும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எல்ஐசி பாலிசிக்கு எதிராக கடனுக்கு விண்ணப்பிக்க இரு முறைகள் உள்ளன. ஆஃப்லைன் மற்றும் ஆன்லைனில் கடனுக்கு ஆயுள் காப்பீட்டு கழகத்திடம் விண்ணப்பிக்கலாம்
அருகிலுள்ள எல்ஐசி அலுவலகத்திற்கு அல்லது உங்கள் பாலிசி உள்ள அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பத்தை வழங்கவும். விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள படிவங்களை பூர்த்தி செய்து விண்ணப்ப செயல்முறையை முடிக்கவும்
அசல் பாலிசி ஆவணத்துடன் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்தால், அவற்றை சரிபார்த்தபின், பாலிசியின் சரண்டர் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் கிடைக்கும்
எல்ஐசி இ-சேவைகளுக்கான பதிவிற்கு சென்று, கடன் பெறும் தகுதி இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும். மேலும், கடன் விதிமுறைகள், நிபந்தனைகள், வட்டி விகிதங்கள் மற்றும் பிற அம்சங்களை மதிப்பாய்வு செய்யவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன் கடன் விதிமுறைகளை சரிபார்க்கவும். பிறகு விண்ணப்பித்துவிட்டு, தேவைப்படும் KYC ஆவணங்களைப் பதிவேற்றவும். ஒரு சில நாட்களில் கடன் தொகை உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை