சிறிய தொகை கொண்டு செய்யப்படும் முதலீடு நாளடைவில் பெரிய கார்பஸாக உருவாகிறது. 25-2-5-35 சூத்திரம் மூலம் முதலீடு செய்தால் அதிகப்படியான வருமானத்தை ஈட்டலாம்.
25-2-5-35 சூத்திரத்தில் 25 என்பது வயதைக் குறிக்கின்றது. 25 வயதில் வாழ்க்கைக்குத் தேவையான முதலீட்டை செய்யத் துவங்க வேண்டும் என கூறப்படுகின்றது.
2 என்பது மாதா மாதம் செய்ய வேண்டிய குறைந்தபட்ச முதலீடான 2,000 ரூபாயை குறிக்கின்றது.
5 என்பது, ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டுத் தொகையில் 5% அதிகரிப்பை செய்ய வேண்டும் என்பதை குறிக்கின்றது. 35 என்பது 35 ஆண்டுகளுக்கு முதலீட்டை தொடர்ந்து செய்வதை குறிக்கின்றது.
SIP -இல் ரூ.2,000 -இல் தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் அதில் 5% அதிகரிக்க வேண்டும்.
35 ஆண்டுகளுக்குப் பிறகு, எஸ்ஐபி முதலீட்டுத் தொகை ரூ.21,67,680 ஆகும். 12% ரிடர்ண் என்ற கணக்கில், வட்டியில் மட்டும் ரூ.1.77 கோடி கிடைக்கும்.
இந்த வகையில், மொத்தமாக 2 கோடி ரூபாய் கார்பஸை உருவாக்கலாம்
இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.