வாடகை வீட்டில் வசிக்கும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
வருமான வரியைச் சேமிக்க, பெரும்பாலான மக்கள் தங்கள் வாடகை வீட்டிற்குச் செலுத்தும் வாடகைக்கு HRA க்ளெய்ம் செய்கின்றனர்.
ஆனால், இதிலும் சிலர் சில மோசடிகளிலும் ஈடுபடுகின்றனர். ஆகையால் சந்தேகம் இருக்கும் இடங்களில் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புகிறது.
வாடகை வீட்டில் வசித்து HRA க்ளெயும் செய்யும் நபர்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும் முன் தயாராக வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் பற்றி இங்கே காணலாம்.
வாடகை வீட்டில் இருக்கும் நபர்களிடம் சரியான வாடகை ஒப்பந்தம் இருக்க வேண்டும். அதாவது உங்கள் வீட்டு உரிமையாளருடன் நீங்கள் வாடகை ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.
HRA க்ளெயின் செய்ய, உங்களிடம் சரியான வாடகை ஒப்பந்தம் மற்றும் வாடகை ரசீது இருக்க வேண்டும். அதாவது, உங்கள் வீட்டு உரிமையாளருக்கு வாடகை செலுத்தியதற்கான ரசீதை நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
வாடகை செலுத்தும் முறையைப் பற்றி பொதுவாக கேட்கப்படாது என்றாலும் சில குழப்பங்களால், வருமான வரித் துறையிலிருந்து உங்களுக்கு நோட்டீஸ் வந்தால், உங்களுக்கு வங்கி அறிக்கை தேவைப்படலாம். நீங்கள் வாடகையை ரொக்கமாகச் செலுத்தினால் இந்தச் சான்றை வழங்க முடியாது.
ITR தாக்கல் செய்யும் போது அல்லது நிறுவனத்தில் HRA க்ளைம் செய்யும் போது வீட்டு உரிமையாளரின் பேன் கார்டை வைத்திருப்பது அவசியமாகும்.
ஐடிஆர் தாக்கல் செய்யும் முன் இந்த அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துக்கொள்வது நல்லது.