நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் தங்கள் பணத்தை தங்கம் மற்றும் நிலத்தில் முதலீடு செய்வது வழக்கம். இருப்பினும் சமீபகாலமாக பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்ய முறையான சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) சிறந்த வழியாகும்.
SIP மூலம், பரஸ்பர நிதியின் கொள்முதல் யூனிட் மதிப்பு சராசரியாக இருக்கும். இதன் மூலம், நீங்கள் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தால் சிறந்த வருவாயைப் பெறுவீர்கள்.
பங்குச் சந்தையில் நாம் நேரடியாக முதலீடு செய்வதை காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்களின் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது என கூறப்படுகிறது.
SIP இன் சிறந்த அம்சம் என்னவென்றால், இது கூட்டு வட்டியின் நன்மையைத் தருகிறது, அதாவது, ஒவ்வொரு மாதமும் நீங்கள் பெறும் வருமானத்தில் கூட வருமானத்தைப் பெறுகிறீர்கள். இதன் காரணமாக உங்கள் மூலதனம் மிக வேகமாக உயருகிறது.
SIP மூலம் முதலீடு செய்வது சந்தை ஏற்ற இறக்கத்துடன் தொடர்புடைய ஆபத்து குறைவாக இருக்கும். சந்தை உயரும் போது, குறைவான யூனிட் மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. அதேநேரத்தில் சந்தை வீழ்ச்சியடையும் போது, அதே அளவு முதலீட்டிற்கு அதிக யூனிட் பெறுவீர்கள்.
எதிர்காலத்தின் நிதிநிலை இலக்குகளை கருத்தில் கொண்டு, அதற்கேற்ப முதலீடு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு மாதமும் நீங்கள் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதையும் மதிப்பீடு செய்ய வேண்டும்.
எனினும் பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்வதிலும் சந்தை அபாயம் உள்ளது என்ற எச்சரிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும்