NDA அரசின் பரிசு: மத்திய அரசு ஊழியர்களுக்கு NPS-ன் கீழ் 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவு

Sripriya Sambathkumar
Jun 17,2024
';

என்பிஎஸ்

தற்போது என்பிஎஸ் (தேசிய ஓய்வூதிய அமைப்பு) முறையில், சந்தை அடிப்படையிலான வருவாய் முறை உள்ளது. அரசின் முன்மொழியப்படும் திட்டத்தில் கடைசியாக பெறப்பட்ட ஊதியத்தில் 50 சதவீதம் வரை ஓய்வூதியமாக பெற உத்தரவாதம் இருக்கும் என கூறப்படுகின்றது.

';

டி வி சோமநாதன் ஓய்வூதியத் திட்டக் குழு

மார்ச் 2023 இல், நிதிச் செயலர் டி.வி. சோமநாதன் தலைமையில் ஒரு குழுவை நிறுவப்பட்டது. பழைய ஓய்வூதிய முறைக்கு திரும்பிச் செல்லாமல் புதிய ஓய்வூதிய முறையிலேயே ஓய்வூதிய பலன்களை மேம்படுத்துவதற்கான வழிகளை இந்த குழு ஆராயும் என கூறப்பட்டது.

';

ஓய்வூதியம்

இந்தக் குழுவிற்கு காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை. மே மாதம் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகவும், இது 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆந்திரப் பிரதேச NPS மாதிரியுடன் அதிக அளவில் ஒத்துப்போவதகவும் கூறப்படுகின்றது.

';

ஆந்திர பிரதேச என்பிஎஸ் மாதிரி

ஆந்திரப் பிரதேச உத்தரவாத ஓய்வூதிய அமைப்பு (APGPS) சட்டம், 2023 இன் கீழ், வருடாந்திரத் தொகை குறைவாக இருக்கும் சந்தர்ப்பங்களில், ஒரு டாப்-அப் மூலம் கடைசியாக பெறப்பட்ட அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை மாதாந்திர ஓய்வூதியமாக பெறுவது உறுதி செய்யப்படுகின்றது.

';

APGPS சட்டம்

APGPS சட்டம், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு மேம்பட்ட பலன்களையும் வழங்கி, அரசாங்க அமைப்பின் நீண்டகால நிதி இலக்குகளிலும் நெருக்கடி வராமல் பார்த்துக்கொள்ளும் என்றும் கூறப்படுகின்றது.

';

ஓய்வூதியதாரர்கள்

முன்மொழியப்பட்ட திட்டம், கடைசியாக பெறப்பட்ட ஊதியத்தில் 40-50 சதவீத ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கும். சேவையின் ஆண்டுகளின் அடிப்படையிலும் ஓய்வூதியத் தொகையிலிருந்து ஏதேனும் பணம் எடுக்கப்பட்டிருந்தால், அதன் அடிப்படையிலும், இறுதி தொகை தீர்மானிக்கப்படும்.

';

மத்திய அரசு ஊழியர்கள்

இந்த என்பிஎஸ் முன்மொழிவு செயல்படுத்தப்பட்டால், 2004 முதல் NPS-ல் பதிவு செய்யப்பட்ட சுமார் 8.7 மில்லியன் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.

';

பொறுப்பு துறப்பு

இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. NPS -இல் முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது. NPS குறித்த சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.

';

VIEW ALL

Read Next Story