பணம் பாதுகாப்பாக உள்ளது: பேடிஎம்
பேடிஎம் பேமெண்ட் வங்கி பிப்ரவரி 29ம் தேதிக்கு பிறகு எந்தவிதமான டெபாசிட்டையும் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற கூடாது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
பல்வேறு விதிமுறைகளை மீறியுள்ளதாக ஆர்பிஐ இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது
கடன் பரிவர்த்தனைகளையும் நிறுத்துமாறு பேடிஎம் நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டும் இல்லாமல் மார்ச் 15ம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் பணத்தை அவர்களின் கணக்கு மாற்ற வேண்டுமென்று தெரிவித்துள்ளது
மேலும், புதிதாக எந்தவிதமான பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டும் இல்லாமல் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையை அடுத்து வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து உங்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது என பேடிஎம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 29ம் தேதிக்கு பிறகும் வாடிக்கையாளர்கள் தங்களின் பணத்தை எடுத்து கொள்ளலாம் என்றும், அதில் எந்தவிதமான சிக்கலும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பேடிஎமில் உள்ள Help வசதி மூலமாக 24x7 எப்போது வேண்டுமானலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.