PF உறுப்பினர்களுக்கு அட்டகாசமான செய்தி: இந்த வரம்பு அதிகரித்தது

';

பிஎஃப் கணக்குகள்

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு சில முக்கிய அப்டேட்கள் வந்துள்ளன. செவ்வாயன்று, அரசாங்கம் பிஎஃப் கணக்குகள் குறித்த சில பெரிய முடிவுகளை எடுத்தது.

';

இபிஎஃப் உறுப்பினர்கள்

இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) தங்கள் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான வரம்பு மாற்றப்பட்டுள்ளது. இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் பணம் எடுக்கும் வரம்பு ரூ.50,000 -இல் இருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

';

இபிஎஃப்

முன்னர், திடீரென பணத்தேவை ஏற்பட்டால், 50,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடிந்தது. இப்போது அது இரட்டிப்பாகி 1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு இது மிகப் பெரிய நிவாரணமாக இருக்கும்.

';

இபிஎஃப் கணக்கு

PF கணக்கு தொடர்பான மற்றொரு மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஊழியர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து 6 மாதங்கள் ஆவதற்கு முன்னதாகவே, தனது இபிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) பணத்தை எடுக்க விரும்பினால், அவர் இப்போது அவ்வாறு செய்ய முடியும்.

';

இபிஎஃப் சந்தாதாரர்கள்

இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) தங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க, குறைந்தது அந்த நிறுவனத்தில் 6 மாதங்கள் வேலை செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. ஆனால் இப்போது அந்த நிபந்தனை இல்லை.

';

இபிஎஃப்ஓ

அரசாங்கம் மற்றொரு முக்கியமான மாற்றத்தையும் செய்துள்ளது. EPFO இன் ஒரு பகுதியாக இல்லாத நிறுவனங்கள், மாநில அரசுகளால் நடத்தப்படும் வருங்கால வைப்பு நிதியைப் பயன்படுத்தலாம்.

';

EPFO

இதுபோன்று மொத்தம் 17 நிறுவனங்கள் உள்ளதாகவும், அவற்றின் பணியாளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளதாகவும், அவற்றுடன் உள்ள நிதி ரூ.1000 கோடிக்கும் அதிகமாக இருப்பதாகவும் மத்திய அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

';

பொறுப்பு துறப்பு

இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான விவரங்களுக்கு அவ்வப்போது EPFO -இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்க பரிந்துரைக்கப்படுகின்றது.

';

VIEW ALL

Read Next Story