ஒரே டெஸ்டில் டபுள் செஞ்சுரி அடித்து டக்அவுட் ஆன 7 பிளேயர்கள்

';

டட்லி நர்ஸ் (தென்னாப்பிரிக்கா)

1935 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் டக்அவுட்டான தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் டட்லி நர்ஸ், இரண்டாவது இன்னிங்ஸில் 231 ரன்கள் விளாசினார்

';

இம்தியாஸ் அகமது (பாகிஸ்தான்)

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் இம்தியாஸ் அகமது 1955ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 209 ரன்கள் விளாசி இரண்டாவது இன்னிங்ஸில் டக்அவுட்டாகியுள்ளார்.

';

சீமோர் நர்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்)

1965 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் சீமோர் நர்ஸ் முதல் இன்னிங்ஸில் 201 ரன்கள் விளாசி, 2வது இன்னிங்ஸில் டக்அவுட்டானார்.

';

விவியன் ரிச்சார்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்)

1984 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 208 ரன்கள் விளாசிய விவியன் ரிச்சார்ட்ஸ் இரண்டாவது இன்னிங்ஸில் டக்அவுட்டானார்

';

ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா)

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2003 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 242 ரன்கள் எடுத்து, இரண்டாவது இன்னிங்ஸில் டக்அவுட்டானார்.

';

சோயிப் மாலிக் (பாகிஸ்தான்)

2015 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் விளாசிய சோயிப் மாலிக் இரண்டாவது இன்னிங்ஸில் டக்அவுட்டானார்.

';

ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்)

2017 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன், முதல் இன்னிங்ஸில் 217 ரன்கள் எடுத்து, 2வது இன்னிங்ஸில் டக்அவுட்டானார்.

';

VIEW ALL

Read Next Story