தபால் துறை மூலம் செயல்படுத்தப்படும் பல சிறுசேமிப்பு திட்டங்களில் மாதாந்திர வருமானத் திட்டம் பிரபலமான ஒரு திட்டமாகும்.
போஸ்ட் ஆபிஸ் எம்ஐஎஸ் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், முதலீடு செய்யும் நேரத்தில் இருக்கும் வட்டி விகிதம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பொருந்தும்.
ஒரு முதலீட்டாளர் இந்தத் திட்டத்தில் ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தால், அவருக்கு ஒவ்வொரு மாதமும் வட்டியாக ரூ.3,083 கிடைக்கும்.
MIS திட்டத்தில் தனிநபர் ஒருவர் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முன்னதாக இந்த வரம்பு ரூ.4.5 லட்சமாக இருந்தது.
கூட்டுக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான இந்த வரம்பு இப்போது ரூ.15 லட்சமாக உள்ளது. முன்னதாக இதன் வரம்பு ரூ.9 லட்சமாக இருந்தது.
MIS இல், இரண்டு அல்லது மூன்று பேர் கூட்டுக் கணக்கைத் திறக்கலாம். இந்தக் கணக்கிலிருந்து பெறப்படும் வருமானம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சமமாக வழங்கப்படுகிறது.
கூட்டுக் கணக்கை எந்த நேரத்திலும் ஒற்றைக் கணக்காக மாற்றலாம். ஒற்றைக் கணக்கை கூட்டுக் கணக்காகவும் மாற்றலாம்.
முதிர்வு காலம் முடிவடைந்ததும், அதாவது ஐந்து ஆண்டுகள் ஆனதும், அதை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும்.
எம்ஐஎஸ் கணக்கில் நாமினேஷன் வசதி உள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு மிக உதவியாக இருக்கும்.நாமினேஷன்