எஃப்டிகளில் முதலீடு செய்யும்போது, கார்ப்பரேட் FD டெபாசிட்கள் பாதுகாப்பற்றவை என்பதால், பலர் பயப்படுகிறார்கள். பொதுவாக தனியார் நிதி நிறுவனங்களின் மீதுள்ள அச்சமே மக்களை பயப்பட வைக்கிறது. அதற்கு பல உதராணங்களும் உள்ளன
டெபாசிட்களை சேகரிக்க விரும்பும் அனைத்து NBFC/நிறுவனங்களும் RBI/கார்ப்பரேட் விவகார அமைச்சகம், விதித்துள்ள கடுமையான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும்
பணத்தை சேமிக்கவோ அல்லது முதலீடு செய்யவோ வைப்புக் கணக்கு சிறந்தது. அதேபோல, கார்ப்பரேட் FDகள், பொதுமக்களிடமிருந்து டெபாசிட்களை பெற்று அதற்கு வட்டி கொடுக்கிறது
கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட்களில் பணத்தை வைக்கும் போது முதலீட்டாளர்களுக்கு ஆபத்து குறைவாக இருப்பதை உறுதி செய்ய ஆர்பிஐ கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளது
ரிசர்வ் வங்கியில் NBFC ஆகப் பதிவு செய்திருந்தால் மட்டும் போதாது, அவர்கள் டெபாசிட்களை ஏற்க முறையான உரிமம் பெற்றிருக்க வேண்டும். நிறுவனம் நிர்வகிக்கும் நிதிச் சொத்துகள் குறைந்தது ரூ.5,000 கோடியாக இருக்க வேண்டும்.
வைப்புத்தொகையின் காலம் குறைந்தபட்சம் ஒரு வருடம் மற்றும் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளாக இருக்க வேண்டும்
மொத்த வைப்புத்தொகை அனுமதிக்கப்பட்ட வரம்பு வரை இருக்கலாம், இது NBFCகளுக்கு ஒன்றுக்கு ஒன்று மாறுபடும்
நிலையான வைப்புத்தொகை தொடர்பான அனைத்து தொடர்புடைய தகவல்களும் ரிசர்வ் வங்கியிடம் தெரிவிக்கப்பட வேண்டும். அவர்கள் டெபாசிட்டருக்கு கூடுதல் சலுகைகள் அல்லது பரிசுகளை வழங்க முடியாது
பொதுமக்களிடம் இருந்து டெபாசிட்களை சேகரிக்கக்கூடிய நிறுவனங்களுக்கு மதிப்பீடுகளை வழங்குகின்றன. AAA, AA போன்ற மதிப்பீடுகள் வழங்கப்படுகின்றன. AAA என்பது மிக உயர்ந்த மதிப்பீடு மற்றும் நிறுவனம் உறுதியான இருப்புநிலைக் குறிப்பைக் குறிக்கிறது. NBFC/நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து டெபாசிட்களை சேகரிக்க குறைந்தபட்ச BBB மதிப்பீட்டை பராமரிக்க வேண்டும்.