வங்கிகளில் கடன் வாங்கிய மற்றும் கடனை திருப்பி செலுத்திவிட்ட வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி.
என்பிஎஃப்சி (NBFC), ஹோம் பைனான்ஸ், ஏஆர்சி (ARC), கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து நிதி சேவை அமைப்புகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
வாடிக்கையாளர்கள் கொடுத்த ஆவணங்களை சரியான நேரத்தில் திருப்பிக் கொடுக்காமல் பல வங்கிகள், நிதி நிறுவனங்கள் செயல்படுகின்றன.
வங்கிக் கடனையும் திருப்பிச் செலுத்திய பிறகும் ஆவணங்களைத் திருப்பித் தர தாமதித்தால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு தர வேண்டும்
புதிய விதிகளின்படி, கடன் வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் கொடுக்க வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் புதிய விதி டிசம்பர் 1, 2023 முதல் அமல்படுத்தப்படும்.
கடனை திருப்பிச் செலுத்திய பிறகு, சம்பந்தப்பட்ட நபரின் ஆவணங்களை 30 நாட்களுக்குள் திருப்பித் தர வேண்டும்.
வாடிக்கையாளர்களின் நலன் கருதி RBI புதிய விதியை அமல்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
முழு கடனை செலுத்திய பிறகு அசையும் மற்றும் அசையா என அனைத்து சொத்து ஆவணங்களையும் திருப்பிக் கொடுப்பது அவசியம்.
இஎம்ஐ, வட்டியில் மாற்றம் ஏற்பட்டால், உடனடியாக கஸ்டமர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை.