இந்தியாவின் மிகவும் பிரபலமான முதன்மையான வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ (SBI), வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது.
கார் வாங்கும் எண்ணத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு SBI -இன் செய்தி மகிழ்ச்சியைத் தரும்.
SBI தனது வாடிக்கையாளர்களுக்கு பண்டிகைக் காலத்தில் (SBI Festive Season) ஒரு சலுகையைக் கொண்டு வந்துள்ளது.
SBI -இன் பண்டிகை கால சலுகையின் கீழ் கார் கடன் வாங்குபவர்கள் இனி எந்த செயலாக்கக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
இந்த பண்டிகை கால சலுகை குறித்து வங்கி ஒரு ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது.
பண்டிகை காலத்தில் கார் கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள், பல ஆயிரம் ரூபாய் சேமிக்கலாம்.
பண்டிகை கால சலுகையின் கீழ் வாங்க்கப்படும் கார் கடனில் வாடிக்கையாளர்களிடமிருந்து செயலாக்கக் கட்டணம் வசூலிக்கப்படாது. எஸ்பிஐ இணையதளத்தின்படி, இந்த சலுகை ஜனவரி 31, 2024 வரை செல்லுபடியாகும்.
தற்போது எஸ்பிஐ கார் கடன் 8.80 சதவீதம் முதல் 9.70 சதவீதம் வரை உள்ளது. SBI கடன்களுக்கான வட்டி விகிதங்கள் வாடிக்கையாளரின் CIBIL மதிப்பெண்ணுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகிறது