CIBIL ஸ்கோரை அதிகரிக்க... ‘சில’ டிப்ஸ்!

';

கிரெடிட் ஸ்கோர்

கிரெடிட் ஸ்கோர் நல்ல நிலையில் இருந்தால் கடன் உடனடியாக கிடைக்கும். அனைவருக்குமே பண தேவை இருக்கும். எனவே கிரெடிட் ஸ்கோரை கண்காணித்து நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

';

ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான சிபில், தனிநபர்களின் வங்கிப் பர்வர்த்தனைகள் மற்றும் கடன் திரும்ப செலுத்தும் திறன் ஆகியவற்றை வைத்து கிரெடிட் மதிப்பீடுகளை வழங்கும்.

';

கடன்

சிபில் ஸ்கோர் நன்றாக இருந்தால், நீங்கள் தடைகள் இன்றி வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன் ஆகியவற்றுக்கு நொடியில் அனுமதி பெறலாம்.

';

சிபில் ஸ்கோர்

உங்களின் சிபில் ஸ்கோர் நன்றாக இருந்தால் கடன் எளிதாக கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன. பொதுவாக 600க்கும் குறைவாக சிபில் ஸ்கோர் இருந்தால் வங்கிகள் கடன் கொடுக்க யோசிக்கின்றன.

';

குறைந்த வட்டி

சிபில் மதிப்பெண் அதிகமாக இருந்தால், குறைந்த வட்டி விகிதம் மற்றும் செயலாக்க கட்டணம் என கடன் வழங்குபவர்கள் சலுகைகளை வழங்குவார்கள். இதனால், ஆயிரக்கணக்கான பணத்தை சேமிக்கலாம்.

';

நிலுவைத் தொகை

சரியான நேரத்தில் பில்களை செலுத்துங்கள். கட்டணத்தை சரியான செலுத்துதல் தொடர்பான விரபரங்கள் கிரெடிட் ஸ்கோரில் மிகப்பெரிய தாக்கத்தை கொண்டுள்ளது. 30 நாள் தாமதம் கூட ஸ்கோரை பாதிக்கலாம்.

';

கிரெடிட் கார்டு

உங்கள் மொத்தக் கிரெடிட் கார்டு வரம்பில் 30% அல்லது அதற்கும் குறைவான தொகையை மட்டுமே அனைத்து கார்டுகளிலும் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பில்லிங் சுழற்சியிலும் கார்டுகளுக்கான நிலுவை தொகையை முழுமையாக செலுத்துங்கள்.

';

கடன்

குறுகிய காலத்திற்குள் அதிகமான கடன் விண்ணப்பங்களை விண்ணப்பித்தால், அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். இன்றியமையாத தேவை ஏற்படும் போது மட்டுமே கடனிற்கு விண்ணப்பிக்கவும்.

';

VIEW ALL

Read Next Story