நீங்கள் பயன்படுத்தி வரும் காரை நல்ல முறையில் சர்வீஸ் செய்வது, அதன் ரீசேல் வேல்யூவை அதிகரிப்பதற்கு மிகவும் உதவும்.
இன்ஷ்யூரென்ஸ் போன்ற கார் சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் முறையாக பராமரிக்கவும்.
காரின் உள் தோற்றமும் சுத்தமாக இருப்பதோடு, சீட் கவர்கள், மேட்கள் போன்றவை சுத்தமாக இருக்க வேண்டும்.
காரில் நசுங்கல்கள், கீறல்கள், பெயிண்ட் உதிர்தல் ஆகியவை இல்லாமல் கார் பார்ப்பதற்கு பளிச் என இருக்க வேண்டும்
காரில் சிகெரட் புகை அல்லது செல்ல பிராணிகள் அசுத்தம் செய்ததால் ஏற்படும் துர்நாற்றம், கரை போன்றவை இல்லாமல் இருக்க வேண்டும்.
டயர்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு, அவற்றில் பாலன்ஸ் மற்றும் காற்றின் அளவு சரியாக இருக்க வேண்டும்.
பிரேக், சஸ்பென்ஷன் போன்றவை நல்ல நிலையில் இருப்பதோடு, பழுதான பாகங்கள் மாற்றபப்ட்டிருக்க வேண்டும்.
காரில் தோற்றத்திற்காக செய்யப்படும், விளக்குகள், ஹார்ன் போன்ற சில மாற்றங்களை தவிர்க்க வேண்டும். சில சமயம் அவை காரின் மதிப்பை குறைத்து விடும்
காரை விற்கு போது, சந்தை நிலை, விற்கப்படும் நேரம் ஆகியவற்றை கவனமாக தேர்ந்தெடுக்கவும்.