EPS: PF உறுப்பினர்களுக்கு கிடைக்கும் 7 வகையான ஓய்வூதியங்கள் இவைதான்

';

EPFO

EPFO நடத்தும் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) மூலம் கிடைக்கும் பல வகையான ஓய்வூதியப் பலன்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

சூப்பரானுவேஷன்

இபிஎஃப் சந்தாதாரர் (EPF Subscriber) 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தகுதியான சேவையைச் செய்து 58 வயதை எட்டியவுடன் ஓய்வு பெற்றால் இந்த ஓய்வூதியம் கிடைக்கும்.

';

எர்ளி ஓய்வூதியம்

ஒரு இபிஎஃப் உறுப்பினர் (EPF Member) 50 வயதுக்கு மேற்பட்டவராகவும், 10 வருட சேவையை முடித்தவராகவும் இருந்து EPF அல்லாத நிறுவனத்தில் சேர்ந்திருந்தால், அவர் எர்ளி ஓய்வூதியம் பெற தகுதியுடையவர் ஆகிறார்.

';

ஊனமுற்றோர் ஓய்வூதியம்

இபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் PF உறுப்பினர் ஊனமுற்றால் (நிரந்தர அல்லது தற்காலிகமாக) இந்த ஓய்வூதியத்தை பெற முடியும்.

';

விதவை மற்றும் குழந்தைகள் ஓய்வூதியம்

இறந்த EPFO ​​உறுப்பினரின் வாழ்க்கைத் துணைக்கு இந்த ஓய்வூதியம் நிதி உதவியை உறுதி செய்கிறது. EPS 95 இன் கீழ் குழந்தைகள் ஓய்வூதியம், இறந்த EPFO ​​உறுப்பினரின் இரண்டு குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் நிதி உதவி வழங்குகிறது.

';

சார்ந்திருக்கும் பெற்றோருக்கு ஓய்வூதியம்

EPF கணக்கு வைத்திருப்பவர் திருமணமாகாதவராக இருந்து இறந்துவிட்டால், அவரது தந்தை மற்றும் தந்தை இறந்த பிறகு, அவரது தாயார் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெற தகுதியுடையவராவார்கள்.

';

அனாதை ஓய்வூதியம்

இறந்த உறுப்பினரின் வாழ்க்கைத் துணையும் உயிருடன் இல்லையென்றால், அனாதை ஓய்வூதியம் மூலம் அவரது குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகின்றது. இந்த ஓய்வூதியத்தில் மாதாந்திர தொகை வழங்கப்படுகின்றது.

';

நாமினி ஓய்வூதியம்

மனைவி அல்லது குழந்தைகள் இல்லாத EPFO ​​உறுப்பினர் மரணம் அடைந்தால், நாமினியாக பரிந்துரைக்கப்பட்ட பயனாளிக்கு நாமினி ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story