Health Tips: ஆரோக்கியமான கண்களுக்கான 10 ‘சூப்பர்ஃபுட்ஸ்’

';

கேரட்

கேரட்டில் (Carrot) உள்ள பீடா கரோடின் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நல்ல பார்வையை அளிக்கின்றது.

';

கீரை

வைட்டமின் சி மற்றும் ஈ அதிகம் உள்ள கீரை வகைகள் கண்களுக்கு பல வழிகளில் உதவும் சூப்பர்ஃபுட் ஆகும்.

';

சர்க்கரைவள்ளி

கேரட்டை போல சர்க்கரைவள்ளி கிழங்கிலும் அதிக பீடா கரோடின் உள்ளது. இது இரவு நேரங்களில் கண் பார்வையை கூர்மையாக்க உதவும்.

';

மீன்

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ள மீன் வகைகள் கண்களில் ஏற்படும் வறட்சியை சரி செய்து மூப்பு தொடர்பான பிரச்சனைகளில் உதவும்.

';

முட்டை

அசைவ உணவு சாப்பிடும் நபர்கள் கண் பார்வையை மேம்படுத்த முட்டையை உட்கொள்ளலாம். இதில் பார்வையை மேம்படுத்தும் பல பண்புகள் உள்ளன.

';

குடைமிளகாய்

பீடா கரோடின் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ள குடைமிளகாய் கண் பார்வையை வலுப்படுத்த மிகச்சிறந்தது

';

கொட்டைகள், விதைகள்

ஆளிவிதை, சூரியகாந்தி விதை போன்ற விதைகளும், பாதாம், வால்நட் போன்ற கொட்டைகளும் வெளிப்புற சேதத்திலிருந்து கண்களை காக்கின்றன

';

ப்ரோக்கோலி

வைட்டமின் சி மற்றும் ல்யூடின் அதிகம் உள்ள ப்ரோக்கோலி கண் பார்வையை மேம்படுத்த ஒரு சிறந்த வழியாக இருக்கிறது

';

பெர்ரி

கண்களில் பிரச்சனை உள்ளவர்கள் ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ள ப்ளூபெர்ரீஸ், ஸ்ட்ராபெர்ரீஸ் போன்ற பெர்ரி வகைகளை உட்கொள்ள வேண்டும்.

';

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இவை கேடராக்ட் மற்றும் மூப்பு தொடர்பான கண் பிரச்சனைகளை தடுக்க உதவும்

';

VIEW ALL

Read Next Story