ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகின்றது. இதை கட்டுக்குள் கொண்டுவரவில்லை என்றால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால், அது, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பல பிரச்சனைகளுக்கு காரணமாகின்றது,
அதிக கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் சில சத்தான உணவு வகைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளது. கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு ஓட்ஸ் ஒரு சிறந்த சிற்றுண்டியாக கருதப்படுகின்றது.
பாதாமில் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஏராளமாக உள்ளன. இதை தினமும் உட்கொள்வது கெட்ட கொழுப்பை குறைப்பதோடு இதய பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரி போன்ற பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. இவை கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதோடு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் ஆகிய ஊட்டச்சத்துகள் உள்ள அவகேடோ எல்டிஎல் கொழுப்பின் அளவை உடனடியாக குறைக்க உதவும்.
கொண்டைக்கடலை, ராஜ்மா, காராமணி ஆகியவற்றில் கரையக்கூடிய நார்ச்சத்து, புரதம் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளன. இவை கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.