பீட்ரூட் ஜூஸ் எடை இழப்புக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகின்றது. இதை தினமும் உட்கொண்டால் சில நாட்களில் வித்கியாசம் தெரியும்.
பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நமது உடல் பல நோய்கள் மற்றும் தொற்றுகளில் இருந்து காப்பாற்றப்படுகிறது.
இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் மற்றும் வயிற்று பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கின்றது.
இது இயற்கையாகவே சர்க்கரையின் மூலமாக இருப்பதால், நமது உடலில் ஆற்றலை அதிகப்படுத்துகிறது.
இது உடலில் ஆக்சிஜனின் அளவை அதிகரித்து இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது, இரத்தத்தை சுத்திகரிக்கிறது.
உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் தொடர்ந்து பீட்ரூட் சாலட் அல்லது ஜூஸ் சாப்பிட்டால் சில நாட்களில் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.
தினமும் பீர்டூட் ஜூஸ் குடித்து வந்தால், அது முகத்தில் இயற்கையான பொலிவை அளிக்கும், இது கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.