நாம் உட்கொள்ளும் உணவானது வயிற்றில் ஜீரணம் செய்யப்பட்டு, அங்கிருந்து சிறுகுடலுக்கும் பெருங்குடலுக்கும் செல்கிறது.
பெருங்குடல் பகுதிக்கு செல்லும்போது, அதில் உள்ள நீர் மற்றும் ஊட்டச்சத்துகள் அங்கு உறிஞ்சப்பட்டு பின் கழிவுகள் உடலில் இருந்து வெளியேற்றுகிறது.
குடலில் கழிவுகள் தங்காமல் இருக்க சில உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும்
ஆரஞ்சுகள், ஆப்பிள் , எலுமிச்சை, கேரட்கள், வெள்ளரி போன்ற ஜூஸ்கள், நமது பெருங்குடலை சுத்தம் செய்ய வல்லவை
நாள் ஒன்றுக்கு 6 முதல் 8 கிளாஸ் தண்ணீர் அருந்தி வந்தாலே, இயற்கை முறையில் நமது பெருங்குடலை நாம் சுத்தமாக வைத்திடலாம்.
முழு தானியங்களில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதோடு, கலோரி, கொழுப்பு போன்றவை குறைவு. இவை எளிதில் செரிமானமாக உதவுவதோடு , பெருங்குடலையும் சுத்தமாக்கும்.
பூண்டு, பாக்டீரியா மற்றும் குடற்புழுவுக்கு எதிரான தன்மை கொண்டுள்ளது. இது பெருங்குடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
பெருங்குடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற கிரீன் டீ தான் சரியான வழி. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி பெருங்குடலை சுத்தம் செய்ய உதவுகின்றன.
சிட்ரஸ் அமிலம் நிறைந்த எலுமிச்சை, ஆன்டிசெப்டிக் ஆகச் செயல்பட்டுப் பெருங்குடலில் நுண்ணுயிரிகள் உருவாவதைத் தடுக்கிறது.
புரோபயாட்டிக் உள்ள தயிர் பெருங்குடலை சுத்தம் செய்ய சிறந்தது
உருளைக்கிழங்கு, அரிசி போன்ற மாவுச்சத்து உள்ள உணவுகள் மூலம் மைக்ரோபுளோராக்கள் அதிகரித்து, பெருங்குடலை சுத்தப்படுத்துகிறது.