பலாப்பழ கொட்டைகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இதனை காய வைத்து பொடி செய்து அல்லது வேக வைத்து சமைத்து சாப்பிடலாம்.
பலாப்பழ கொட்டைகளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், பாலியல் தொடர்பான பல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க பாரம்பரிய ஆசிய மருந்துகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன
பலாப்பழ கொட்டைகள் குடல் மற்றும் செரிமான பிரச்சனைகளை நீக்குவதுடன் மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்க உதவுகிறது.
விட்டமின் பி-காம்ப்ளக்ஸ் அதிகம் உள்ளதால், உணவை ஆற்றலாக மாற்றுவதிலும் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதிலும் பலாப்பழ கொட்டைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன
பலாப்பழ கொட்டைகள் ரெஸ்வெராட்ரோல் என்ற ஆக்ஸிஜனேற்றத்தின் நல்ல மூலமாகும். இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடல் பருமனை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பலாப்பழ கொட்டையில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.
புரதம் நிறைந்த பலாப்பழ கொட்டைகள், தசைகளை வலுவாக்க உதவுகின்றன. இதனை உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்கள் உடலின் புரதச்சத்து அதிகரிக்கிறது.
பலாப்பழ விதைகளில் காணப்படும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வயதான தோற்றம், சரும சுருக்கங்களுக்கு எதிராக போராடுகிறது. முதுமையை தடுக்கிறது.
பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.