குறட்டைக்கு குட் பை சொல்ல.... சில டிப்ஸ் இதோ..!!

';

குறட்டை

சுவாசிக்கும் காற்றானது மூச்சுக்குழாய் வழியே நுரையீரலை அடைகிறது. இந்த பாதையில் தடைகள் ஏற்பட்டால் திசுக்கள் அதிர்வுறுவதால் குறட்டை ஏற்படுகிறது.

';

குறட்டை

குறட்டை என்பது தூக்கம் தொடர்பான பிரச்சனை. குறட்டை ஏற்படுவதால் அடுத்தவர்களின் தூக்கம் கெடுவதோடு குறட்டை விடுபவரும் குற்றவாளியாக பார்க்கப்படுகிறார்.

';

மஞ்சள் பால்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து கலக்கி இரவு படுக்க செல்லும் முன் தினமும் பருகுவது குறட்டையை போக்க உதவும்

';

தூங்கும் நிலை

நீங்கள் தூங்கும் நிலையை மாற்றுவதன் மூலம் குறட்டை பிரச்சனையை ஓரளவிற்கு தவிர்க்கலாம். படுக்கும்போது சற்று அதிக அளவில் தலையணைகளைப் பயன்படுத்தலாம்.

';

கொழுப்பு உணவு

இரவில் தூங்க அதிக கொழுப்பு உணவுகளை உட்கொண்டால், சளியை அதிகரிக்கச் செய்து குறட்டைக்கு வழிவகுக்கும். எனவே, கொழுப்புச் சத்துள்ள உணவுப் பொருட்களை இரவில் தவிர்க்கவும்.

';

புதினா

புதினா குறட்டை பிரச்சனையை நீக்க உதவும். தூங்கும் முன் உங்கள் மூக்கில் சில துளிகள் புதினா எண்ணெயை விட பலன் கிடைக்கும்.

';

மது

குறட்டை பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், தூங்கும் முன் மது பானங்களை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

';

புகை பழக்கம்

புகைபிடிக்கும்போது, தொண்டையில் புண் மற்றும் வீக்கங்களை உருவாக்கி குறட்டை பிரச்சனையை அதிகரிக்கும். எனவே புகை பிடித்தலை கைவிட வேண்டும்.

';

பொறுப்பு துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story