வயது ஏற ஏற, சருமத்தில் சுருக்கம், வறட்சி போன்ற பல சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
சருமத்தை இளமையாக பராமரிக்க விரும்பினால், உடலில் கொலாஜன் உற்பத்தியை பாதிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
அதிகப்படியான உப்பு சருமத்தில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் கண்களுக்கு கீழே பைகள் தொங்கி தோற்றத்தை பாதிக்கும்.
அதிக அளவில் உப்பு உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், ஊறுகாய் போன்றவற்றை முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது.
மைதாவில் தயாரித்த, பரோட்டா, வெள்ளை பிரெட், போன்ற உணவுகள் கொலாஜன் உற்பத்தையை குறைக்கும்.
ஆல்கஹால் ஒரு டையூரிடிக். இதனால் உடல் அதிக சத்துக்களை இழக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு கொலாஜன் உற்பத்தி திறனை பாதிக்கிறது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.