நாள் முழுவதும் ஆற்றல் குறையாமல் இருக்க... காலை உணவிற்கு ஏற்ற ‘சில’ உணவுகள்!

Published by: Vidya Gopalakrishnan | Aug 06, 2023

காலை உணவில் புரதம், நார்சத்து, நல்ல கொழுப்பு, கார்போஹைட்ரேட் கொண்ட சரிவிகித உணவுகளை சேர்ப்பதன் மூலம் ஆற்றலோடு, வளர்சிதை மாற்றத்தையும் ஊக்குவிக்க முடியும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 06, 2023

ராகி

காலை உணவாக ராகி கஞ்சி, ராகி இட்லி, ராகி தோசை ஆகியவற்றை சாப்பிடுவதன் மூல, உடலுக்கு நார்சத்து, இரும்பு சத்து போதுமான அளவு கிடைக்கிறது. ஆற்றலை அள்ளி வழங்கும் ராகி வயிறு நீண்ட நேரம் நிரம்பியதாக உணர வைக்கிறது.

Published by: Vidya Gopalakrishnan | Aug 06, 2023

வாழைப்பழம்

வாழைப்பழத்தை அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் ஆற்றல் அதிகரிக்கும். இதன் மூலம், உங்கள் உடல் நல்ல சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவற்றில் நிறைந்திருக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 06, 2023

முட்டை

ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்த முட்டைகள் உங்கள் உடலை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இதில் உள்ள கோலின் மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாட்டைத் தூண்டுகிறது.

Published by: Vidya Gopalakrishnan | Aug 06, 2023

இட்லி

ப்ரோபயோடிக் உணவுகளான இட்லி, தோசையை சாம்பார் -சட்னியுடன் சாப்பிடுவதால் புரதம், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் ஏராளமாக கிடைக்கும். இட்லியில் கலோரிகள் மிகவும் குறைவு.

Published by: Vidya Gopalakrishnan | Aug 06, 2023

உலர் பழங்கள்

உலர் பழங்கள் மற்றும் விதைகளில் நார்ச்சத்து, புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளதால், நாள் வயிறு நிறைவாக உணர வைக்கும்

Published by: Vidya Gopalakrishnan | Aug 06, 2023

இனிப்புகள்

பேஸ்ட்ரிகள் அல்லது பான்கேக்குகள் போன்ற சர்க்கரை அதிகம் உள்ள பொருட்களை உண்பது உடலுக்குள் இன்சுலின் உற்பத்தியை பாதித்து நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். .

Published by: Vidya Gopalakrishnan | Aug 06, 2023

துரித உணவு

காலை உணவில் துரித உணவுகளை மறந்தும் கூட சாப்பிட வேண்டாம். அதிக உப்ப , அதிக சோடியம் கொண்ட இவை சோம்பலை கொடுப்பதோடு நோயெதிர்ப்பு சக்தி காலி செய்து விடும்

Published by: Vidya Gopalakrishnan | Aug 06, 2023

பொறுப்புத் துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 06, 2023

VIEW ALL

Read Next Story