டீடாக்ஸ் ஜூஸ்: உடலில் உள்ள நச்சுகளை நச்சுனு நீக்கும் சூப்பர் சாறுகள் இதோ

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

டீடாக்ஸ்

நம் உடலில் உள்ள நச்சுகளை அவ்வப்போது நீக்குவது மிக அவசியம். நம் உடலை டீடாக்ஸ் செய்ய உதவும் சிறந்த சாறுகள் பற்றி இங்கே காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

இஞ்சி பீட்ரூட் சாறு

இயற்கையான நச்சு நீக்கிகளாக இருக்கும் பிட்ரூட் மற்றும் இஞ்சி சாறு குடிப்பதன் மூலம் உடலில் உள்ள நச்சுகள் நீங்குவதுடன் கல்லீரலும் சுத்தமாகின்றது.

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

ABC Juice

ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் (ABC) ஆகியவற்றை சேர்த்து சாறு செய்து உட்கொள்வது உடலுக்கு தேவையான வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் நார்ச்சத்தை அளிப்பதோடு, நச்சுகளை நீக்கி, வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகின்றது.

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

இஞ்சி, வெள்ளரி, ஆப்பிள் சாறு

இஞ்சி, வெள்ளரி, ஆப்பிள் மூன்றையும் சேர்த்து ஜூஸ் செய்து குடிப்பது உடலில் உள்ள நச்சுகளை வேகமாக நீக்கவும் செரிமானத்தை சீராக்கவும் உதவுகின்றது.

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

சுரைக்காய் சாறு

காலையில் வெறும் வயிற்றில் சுரைக்காய் சாறு குடிப்பதால் உடலின் செரிமானம் நன்றாக நடந்து நச்சுகள் உடலை விட்டு வேகமாக வெளியெறுகின்றன.

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

கீரை, புதினா சாறு

கீரை மற்றும் புதினா சாறில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது சோர்வை அகற்றி ஆற்றலை அதிகரிக்கின்றது. உடலில் உள்ள நச்சுகளை நீக்குவதோடு இந்த சாறு மூளை செயல்பாட்டையும் துரிதப்படுத்துகின்றது.

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

பொறுப்பு துறப்பு

அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

VIEW ALL

Read Next Story