ஒரே வாரத்தில் எடை குறைக்க இந்த டிப்ஸ் உதவும்... ட்ரை பண்ணி பாருங்க

Published by: Sripriya Sambathkumar | May 02, 2024

எடை இழப்பு

வேகமாக ஏறும் எடையை குறைத்து, தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் சில குறிப்புகளை இங்கே காணலாம். இவற்றை பின்பற்றினால் ஒரே வாரத்தில் வித்தியாசத்தை உணர முடியும்.

Published by: Sripriya Sambathkumar | May 02, 2024

உணவின் நேரம்

காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு ஆகிய மூன்றையும் தவிர்க்க கூடாது. சரியான வேளையில் சாப்பிடாமல் இருப்பது உடல் எடை அதிகரிக்க வழி வகுக்கும்.

Published by: Sripriya Sambathkumar | May 02, 2024

துரித உணவுகள்

துரித உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், அதிக எண்ணெய் கொண்ட உணவுகள், அதிக உப்பு, சர்க்கரை, காரம் கொண்ட உணவுகள், சரியாக சமைக்கப்படாத உணவுகள் ஆகியவற்றை தவிர்க்கவும். சமச்சீர் உணவை உட்கொள்வது நல்லது.

Published by: Sripriya Sambathkumar | May 02, 2024

தண்ணீர்

எடை இழப்பில் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது மிக அவசியம். இது உடலை நீரேற்றமாக வைத்திருகப்பதோடு உடலின் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது.

Published by: Sripriya Sambathkumar | May 02, 2024

தூக்கம்

தினமும் இரவில் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும். போதுமான உறக்கம் இல்லாதபோது உடல் எடை அதிகரிகிறது. ஆயுர்வேதத்தின் படி, தாமதமாக தூங்குவது வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றின் சமநிலையை கெடுக்கின்றது.

Published by: Sripriya Sambathkumar | May 02, 2024

இரவு உணவு

இரவு தூங்குவதற்கு குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்கு முன்னராவது இரவு உணவை உட்கொள்ள வேண்டும். 7 மணிக்குள் இரவு உணவை உட்கொள்வது நல்லது.

Published by: Sripriya Sambathkumar | May 02, 2024

மன அழுத்தம்

மன அழுத்தம் உடல் எடையை அதிகரிக்கும். யோகா, இசை மற்றும் வழக்கமான உடல் செயல்பாடுகள் மூலம் மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்.

Published by: Sripriya Sambathkumar | May 02, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | May 02, 2024

VIEW ALL

Read Next Story