உடல் பருமன் பல விதமான உடல் உபாதைகளை ஏற்படுத்துகின்றது. ஆகையால் இதை கட்டுக்குள் வைக்க வேண்டியது மிக அவசியமாகும்.
இயற்கையான வழியில் தொப்பை கொழுப்பைக் குறைத்து உடல் எடையையும் குறைக்க உதவும் சில ஆரோக்கியமான பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஓம நீர்: நார்ச்சத்தும், பல வகையான தாதுக்களும் நிறைந்துள்ள ஓம நீர் செரிமானத்தை சீராக்கி, தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையையும் குறைக்க உதவுகின்றது.
தினமும் காலையில் எலுமிச்சை தண்ணீரை உட்கொள்வது உடல் எடையை குறைக்க மிகவும் எளிய மற்றும் உறுதியான வழியாக கருதப்படுகின்றது. இதில் உள்ள வைட்டமின் சி உடல் எடை குறைக்க உதவுவதோடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
சீரகத்தில் அதிக அளவிலான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது செரிமானத்தை சீராக்கி தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.
ஆப்பிள் சைடர் வினிகரில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இவை வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடலில் உள்ள கூடுதல் கொழுப்பை எரிக்கும்.
ஆண்டி ஆக்சிடென்ட்கள் அதிகமாக உள்ள கிரீன் டீ எடை இழப்பில் பெரிய அளவில் உதவும். இதில் உள்ள மருத்துவ குணங்கள் உடல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.