கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டியது மிக அவசியமாகும்.
கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்து இரத்த சர்க்கரை அளவையும் குறைக்க உதவும் பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கிரீன் டீயில் பலவித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இவை சர்க்கரை அளவை குறைத்து கொலஸ்ட்ராலையும் கட்டுக்குள் வைக்கின்றன.
இலவங்கப்பட்டையில் இருக்கும் பண்புகள் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும். இவற்றின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதய ஆரோக்கியத்திற்கு வலிமை சேர்க்கின்றன.
இஞ்சியில் ஜிஞ்சரால் உள்ளது, இது செரிமானத்தை சீராக்கி இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.
துளசி பலவித மருத்துவ குணங்கள் நிறைந்தது. துளசி தேநீர் நீரிழிவு நோயாளிகளுக்கும் கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும்.
வெந்தயத்தில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் கெட்ட கொழுப்பை குறைப்பதோடு இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கும். சுகர் நோயாளிகள் வெந்தயத்தை ஊற வைத்து அதன் நீரை உட்கொள்ளலாம்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.