பாடாய் படுத்தும் யூரிக் அமிலத்தை பக்குவமாய் குறைக்கும் பானங்கள்

Published by: Sripriya Sambathkumar | Jun 30, 2024

யூரிக் அமிலம்

இயற்கையான வழியில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தி மூட்டு வலிக்கும் நிவாரணம் அளிக்கும் சில பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jun 30, 2024

எலுமிச்சை சாறு

வெறும் வயிற்றில் வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து குடித்து வந்தால் யூரிக் அமில அளவு கட்டுக்குள் இருக்கும். இதிலுள்ள வைட்டமின் சி உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.

Published by: Sripriya Sambathkumar | Jun 30, 2024

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து குடித்து வர யூரிக் அமிலம் வேகமாக சிறுநீர் வாயிலாக வெளியேற்றப்படும்.

Published by: Sripriya Sambathkumar | Jun 30, 2024

ஓம தண்ணீர்

தினமும் காலையில் ஓம தண்ணீரை குடித்து வந்தால் வயிற்றில் உள்ள நச்சுகள் நீங்கும், யூரிக் அமிலம் கட்டுக்குள் இருக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Jun 30, 2024

இஞ்சி டீ

இஞ்சி டீ யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவதோடு உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கும் நிவாரணமாக அமைகின்றது.

Published by: Sripriya Sambathkumar | Jun 30, 2024

நெல்லிக்காய் சாறு

யூரிக் அமிலம் அதிகம் உள்ளவர்கள் நெல்லிக்காய் சாறு குடிக்கலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

Published by: Sripriya Sambathkumar | Jun 30, 2024

தனியா நீர்

தனியா நீரை தினமும் குடித்து வந்தால் யூரிக் அமில அளவு கட்டுப்படுவதோடு மூட்டு வலிக்கும் நிவாரணம் கிடைக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Jun 30, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Jun 30, 2024

VIEW ALL

Read Next Story