அடாவடி கொலஸ்ட்ராலை அதிரடியாய் கட்டுப்படுத்தும் உலர் பழங்கள்

';

கொலஸ்ட்ரால்

நாம் உட்கொள்ளும் பலவித உணவு வகைகளால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. உடலில் கொழுப்பின் அளவு அதிகமானால் இதய ஆரோக்கியம் உட்பட உடலின் பல முக்கிய செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.

';

உலர் பழங்கள்

கொலஸ்ட்ரால் அளவை குறைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில உலர் பழங்கள் பற்றி இங்கே காணாலாம்.

';

ஹேசல்நட்

ஹேசல்நட்ஸ்களில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் கொழுப்பைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

';

பாதாம்

வைட்டமின் ஈ மற்றும் பிற ஆரோக்கிய நன்மைகள் கொண்ட பாதாமை ஊற வைத்து உட்கொள்வது கெட்ட கொலஸ்ட்ராலை வேகமாக குறைக்க உதவும்.

';

பேரீச்சம்பழம்

இரும்புச்சத்து, வைட்டமின்கள், புரதச்சத்து மற்றும் பல வித தாதுக்கள் உள்ள பேரீச்சம்பழம் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுவதோடு இரத்த சோகைக்கு, நிவாரணம் அளிக்கின்றது.

';

வால்நட்

புரதச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள வால்நட் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுவதோடு எடை இழப்பிலும் உதவுகிறது.

';

உலர் திராட்சை

பல வித ஆரோக்கிய நன்மைகள் கொண்ட உலர் திராட்சை கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதோடு செரிமானத்தையும் சீராக்குகின்றது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story