மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சில உணவுகளை பற்றி இங்கே காணலாம்.
இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி ஆக்சிடெண்ட் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மஞ்சளில் குர்குமின் என்ற கலவை உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடெண்ட்கள் உள்ளன. அவை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது
கிரீன் டீயில் உங்கள் நோயெதிர்ப்பு அமைப்புக்கு சிறந்த கேடசின்கள் எனப்படும் ஆண்டி ஆக்சிடெண்ட்கள்உள்ளன.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதால், உங்கள் காலை உணவில் பெர்ரிகளை சேர்த்துக்கொள்வது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்.
காலையில் பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நமது நினைவாற்றல் அதிகரிக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது.
ஆரஞ்சு போன்ற பழங்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு உதவியாக இருக்கும் வைட்டமின் சியின் மூலமாகும்.
உங்கள் காலை உணவில் தயிர் சேர்த்துக் கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது