இன்றைய அவசர வாழ்க்கையில் பல நோய்கள் நம் உடலை எளிதில் ஆட்கொள்கின்றன. அவற்றில் முக்கியமானது நீரிழிவு நோய்.
நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய சில பழங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இதில் பிரக்டோஸ் வடிவில் அதிக சர்க்கரை இருந்தாலும், இதன் ஃபைபர் உள்ளடக்கம் நீரிழிவு நோயாளிகளுக்கு நீண்ட நேரம் நிறைவான உணர்வை அளிக்கின்றது. இதை சரியான அளவில் சாப்பிடுவது பலன் தரும்.
பேரிக்காயில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் இதை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்
தினமும் ஒரு ஆப்பிளை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதோடு இன்னும் பல உடல் நல பிரச்சினைகளிலும் தீர்வு காணலாம்.
ரத்த சக்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யவும் பப்பாளி உதவும்
கொய்யாவில் அதிக நார்ச்சத்து உள்ளது. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நீரிழிவு நோயாளிகள் இதை தினமும் உட்கொள்ள வேண்டும்
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை