ஆரோக்கியத்தின் ஒரு பொக்கிஷமாக விளங்கும் இலவங்கப்பட்டையின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
தினமும் ஒரு கிளாஸ் இலவங்கப்பட்டை தண்ணீரை குடிப்பதால், நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன.
இலவங்கப்பட்டையில் இயற்கையான செரிமான பண்புகள் உள்ளன. இதன் தண்ணீரை குடிப்பதன் மூலம் வாயுத்தொல்லை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
தினமும் இலவங்கப்பட்டை தண்ணீரை குடித்து வந்தால், அது நமது மூளை சிறப்பாக செயல்படவும் நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவும்.
இலவங்கப்பட்டை தண்ணீரை தொடர்ந்து குடிப்பவர்களின் நரம்புகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைவாக இருக்கும். இது இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.
நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் இலவங்கப்பட்டையில் உள்ளன. இது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இலவங்கப்பட்டை நீர் ஆரோக்கியமான நிறத்தை மேம்படுத்தி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இது முகப்பரு உட்பட பல சரும பிரச்சனைகளை நீக்கும்.
இலவங்கப்பட்டை தண்ணீரை நச்சுநீக்கும், அதாவது டீடாக்ஸ் பானமாக அல்லது மூலிகை தேநீர் வடிவில் குடிப்பது வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமானத்தை அதிகரிக்க உதவி கூடுதல் கிலோவை குறைக்க உதவுகிறது