உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலை (எல்டிஎல் கொலஸ்ட்ரால்) குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவும் சில ஆரோக்கியமான உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பிரவுன் ரைஸ், கினோவா, தினை வகைகள் போன்ற முழு தானியங்களில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகின்றன.
அவொகேடோ, பப்பாளி, தக்காளி போன்ற பழங்கள் கெட்ட கொலஸ்ட்ராலை அகற்றி கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
பாதாம், அக்ரூட் பருப்புகள், வேர்க்கடலை ஆகியவையும் பிற நட்ஸ்களும் கெட்ட கொழுப்பை குறைப்பதில் உதவுகின்றன. இவற்றை தினமும் உட்கொள்ளலாம்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் வகைகளை உட்கொள்வதும் கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு நன்மை செய்யும். இவற்றை தினமும் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.
மீன் சாப்பிடாதவர்கள் சூரியகாந்தி விதைகள், சியா விதைகள், எள், பூசணி விதைகள் ஆகியவற்றை உட்கொள்ளலாம். இவை கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்,
தினமும் பீன்ஸ், பட்டாணி, கீரை போன்ற பச்சை காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை உட்கொள்வதால் எல்டிஎல் கொலஸ்ட்ரால் குறைந்து நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கின்றது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.