சில இயற்கையான பானங்களை இரவில் குடித்தால், தொப்பை கொழுப்பையும் உடல் எடையையும் எளிதாக குறைக்கலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இலவங்கப்பட்டையில் உடல் எடையை குறைக்க உதவும் பல பண்புகள் உள்ளன. இவை தொப்பை கொழுப்பை குறைக்க உதவுவதோடு உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது.
துளசியில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. தினமும் துளசி தேநீர் குடிப்பது தொப்பை கொழுப்பை விரைவாக குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவும்.
கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கேட்டசின்கள் அதிகமாக உள்ளன. இவை வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகின்றன.
ஓமத்தை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வடிகட்டி குடித்து வந்தால், செரிமானம் சீராகி, தொப்பை கொழுப்பு (Belly Fat) கரைந்து உடல் எடையும் வேகமாக குறையும்.
எலுமிச்சை சாற்றை வெந்நீரில் கலந்து குடிப்பது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். இதில் வைட்டமின் சி உள்ளது. இது உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது.
சோம்பு நீர் இரவில் குடிப்பதற்கான எளிய மற்றும் மிகவும் பயனுள்ள பானமாகும். இதில் குறைந்த கலோரிகள் உள்ளன. இது இரவில் தேவையற்ற பசியைக் குறைக்கிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.