இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? உங்களுக்கு பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன.
சமீபத்தில் தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது அமைச்சகம் மற்றும் EPFO, இபிஎஃப் உறுப்பினர்களின் நன்மைக்காகவும் வசதிக்காகவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தீபாவளி பரிசாக சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என கூறப்படுகின்றது. எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகளின் பட்டியல் இதோ.
குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன. குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை தற்போது இருக்கும் ரூ.1,000 -இலிருந்து ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை கணக்கிடுவதற்கான சம்பள வரம்பை ரூ.15,000 லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.
பல வித மாற்றங்களின் மூலம், NPS இன் கீழ் பணத்தை எடுப்பது போல, இபிஎஃப்ஓ -விலும் பணம் எடுக்கும் முறை மாற்றப்படலாம் என கூறப்படுகின்றது.
இபிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) அவசர காலங்களில் எடுக்கப்படும் தொகைக்கான வரம்பை ரூ.50,000 -இலிருந்து ரூ.1 லட்சமாக சமீபத்தில் அரசு அதிகரித்தது.
இபிஎஃப் தொகையை (EPF Amount) எடுக்க ஊழியர்கள் 6 மாத சேவை காலத்தை முடித்திருக்க வேண்டும் என்ற விதியும் தளர்த்தப்பட்டுள்ளது. இப்போது ஊழியர்கள் அதற்கு முன்னரும் பணத்தை எடுக்கலாம்.
இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. EPF குறித்த சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.