இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ள சுகர் நோயாளிகள் தங்கள் உணவிலும் உடல் செயல்பாடுகளிலும் அதிக கனவம் செலுத்த வேண்டும்.
சுகர் நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் சில விதைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஆளி விதைகளில் ஆல்பா-லினோலெனிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இந்த விதைகளை சாப்பிடுவதன் மூலம் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தலாம். இதனால் சுகர் லெவல் கட்டுக்குள் இருக்கும்.
நீரிழிவு நோயாளிகள் பூசணி விதைகளை சாப்பிட்டு இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம். மெக்னீசியம், ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் ஒமேகா-3 நிறைந்துள்ள இந்த விதைகள் கொலஸ்ட்ராலையும் குறைக்கின்றன.
இதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. வெந்தய தண்ணீர் குடிப்பதன் மூலம் சர்க்கரையை கட்டுப்படுத்தலாம், மலச்சிக்கலிலும் நிவாரணம் கிடைக்கும்.
கடுகு இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் என்பது பலருக்கு தெரியாது. இதில் உள்ள கலவைகள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி கொலஸ்ட்ரால் அளவை குறைக்கின்றன.
சூரியகாந்தி விதைகளை உட்கொள்வதால் இன்சுலின் செல்களை அதிகரிக்கும் நார்ச்சத்து அதிகம் கிடைக்கிறது. இதனால் சர்க்கரை எளிதில் ஜீரணமாகி, சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். இதுநோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.