சுகர் லெவலை சுலபமாய் கட்டுப்படுத்த இந்த காய்கள் உதவும்

Published by: Sripriya Sambathkumar | Aug 30, 2024

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் சமீப காலங்களில் ஒரு தீவிர பிரச்சனையாக மாறி வருகிறது. முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் இதன் பிடியில் சிக்கி வருகிறார்கள்.

Published by: Sripriya Sambathkumar | Aug 30, 2024

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் காய்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Aug 30, 2024

பாகற்காய்

இரத்த சர்க்கரை அளவை குறைக்க பாகற்காய் உற்ற காயாக கருதப்படுகின்றது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து ஏராளமாக உள்ளன. இந்த கூறுகள் அனைத்தும் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகின்றன.

Published by: Sripriya Sambathkumar | Aug 30, 2024

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி சாப்பிடுவது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த பெரிய அளவில் உதவும். இது உடலில் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. ப்ரோக்கோலியிலும் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.

Published by: Sripriya Sambathkumar | Aug 30, 2024

பாலக் கீரை

இரும்புச் சத்து அதிகம் உள்ள பாலக் கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அறியப்படுகின்றது. இதன் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிகக்குறைவு. பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பாலக் கீரையில் உள்ளன. சுகர் நோயாளிகள் இதை உட்கொள்ளலாம்.

Published by: Sripriya Sambathkumar | Aug 30, 2024

வெண்டைக்காய்

நீரிழிவு நோயாளிகளுக்கு வெண்டைக்காய் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். இதில் அதிக அளவில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இது தவிர, இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிக்கும் சில கூறுகளும் வெண்டைக்காயில் உள்ளன.

Published by: Sripriya Sambathkumar | Aug 30, 2024

நீரிழிவு நோயாளிகள்

உணவு கட்டுப்பாடு நீரிழிவு நோயாளிகளுக்கு மிக அவசியம். இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத உணவுகளை இவர்கள் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

Published by: Sripriya Sambathkumar | Aug 30, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Aug 30, 2024

VIEW ALL

Read Next Story