கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க நினைப்பவர்கள் முழு தானியங்களை தங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும்.
ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்றன.
பாதாம், பிஸ்தா, நிலக்கடலை போன்ற உலர் பழங்கள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. இவை நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன.
ஓட்ஸ் சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு குறைகிறது. கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு ஓட்ஸ் சிறந்த காலை உணவாக பார்க்கப்படுகின்றது.
நெல்லிக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் அமினோ அமிலமும் உள்ளன. இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது.
இவற்றைத் தவிர கெட்ட கொழுப்பை குறைக்க ஆரோக்கியமான, சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும்.
தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது யோகாசனம், ஓட்டப்பயிற்சி, நடைப்பயிற்சி போன்ற ஏதாவது ஒரு உடற்பயிற்சியை செய்ய வேண்டியது அவசியமாகும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.