மாதவிடாய் காலங்களில் யோகா செய்யலாமா என்பது பெண்களுக்கு பொதுவாக உள்ள ஒரு கேள்வியாக உள்ளது.
மாதவிடாய் காலங்களில் எளிய யோகாசனங்களை செய்யலாம்.
மாதவிடாய் காலங்களில் வயிற்றிலும் வயிற்றின் அடிப்பகுதியிலும் வலி இருக்கும். லேசான யோகாசனங்கள் அவற்றை போக்க உதவும்.
மாதவிடாய் காலங்களில் உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கும். யோகாசனங்கள் அந்த ஹார்மோகளை சீராக்க உதவும்.
யோகாசனங்களால் உடலில் அனைத்து ஹார்மோன்களும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
மாதவிடாய் காலங்களில் பொதுவாக பெண்களுக்கு மூட் ஸ்விங்ஸ் ஏற்படும்,
யோகாசங்கள் மூட் ஸ்விங்ஸ் மற்றும் இறுக்கங்களை சரி செய்ய உதவும்
மாதவிடாயில் லேசான யோகாசங்களை செய்யலாம். எனினும் உங்களுக்கு வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தால், மருத்துவரை அணுகவும்.