கொழுப்பை கரைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கீரைகள்!

';

கொலஸ்ட்ரால் பிரச்சனை

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையுடன் தொடர்புடையது. உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது, ​​அது நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதய நோய்கள் போன்ற பிற நாட்பட்ட நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற அபாயகரமான நிலைமைகளை தவிர்க்க சில கீரைகளை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்

';

துளசி இலைகள்

உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க துளசி இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் துளசி இலைகளை மென்று சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைத் தடுக்கலாம். அதேபோல், துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து குடிப்பதும் நன்மை பயக்கும்.

';

கறிவேப்பிலை

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள கறிவேப்பிலையை உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். சில ஆய்வுகளின்படி, வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை மென்று சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

';

வேப்பிலை

தினமும் வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை மென்று சாப்பிடுவதும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. வேப்ப இலைகள் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதோடு, சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் தடுக்கவும் உதவுகிறது

';

பீட்ரூட் கீரை

சிறந்த உணவாக அமைவதோடு புரதம் மற்றும் தாது உப்புகள், உயிர் சத்துகள் நிறைந்த ஒரு கீரையாகும். பீட்ருட் கீரை, சிறுநீர் மூலம் கெட்டக் கொழுப்பை வெளியேற்றுகிறது

';

முருங்கைக்கீரை

பொரியல், சூப் என விதம்விதமாக முருங்கை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், கெட்ட கொழுப்பு குறைவதுடன் ஊட்டச்சத்து குறைபாடும் நீங்கும். நரம்புகளில் கொலஸ்ட்ரால் சேருவதைத் தடுக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் முருங்கைக்கீரையில் உள்ளன.

';

வெந்தயக்கீரை

பல்வேறு வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ள வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். இது உடலில் படிந்துள்ள கொழுப்பை அகற்ற உதவும்

';

பொறுப்புத் துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story