உடலில் யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க வேண்டியது மிக அவசியமாகும். இது அதிகமானால் பல வித உடல் உபாதைகள் ஏற்படும்.
யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்க உதவும் தினசரி உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள யூரிக் அமிலத்தையும் பிற நச்சுகளையும் வேகமாகவும் எளிய முறையிலும் வெளியேற்ற உதவும்
காய்கள் மற்றும் பழங்களில் பியூரின் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. யூரிக் அமில நோயாளிகள் இவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
முழு தானியங்கள் யூரிக் அமில அளவை குறைக்க உதவும். இவற்றில் பிற ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.
செர்ரி பழங்களில் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் அதிகமாக உள்ளன. இவை யூரிக் அமிலத்தை குறைப்பதோடு மூட்டு வலிக்கும் நிவாரணம் அளிக்கின்றன.
கிரீன் டீயில் உள்ள ஆண்டி-ஆக்சிடெண்டுகள் யூரிக் அமில அளவுகளை கட்டுக்குள் வைக்க உதவுவதோடு வீக்கத்தை குறைக்கவும் உதவுகின்றது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.