நமது உடலை கட்டுப்படுத்தும் மூளை, ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
மூளை ஆரோக்கியத்திற்கு சில வைட்டமின்கள் அத்யாவசியம். இவற்றின் குறைபாடு மூளையின் ஆற்றலை பாதிக்கும்.
மூளை சிறப்பாக செயல்பட வைட்டமின் பி6 மிகவும் அவசியம். வாழைப்பழம், முட்டை, உருளைக்கிழங்கு ஆகியவற்றில் இவற்றை அதிகம் பெறலாம்.
மூளையின் நினைவாற்றலை மேம்படுத்த வைட்டமின் ஈ அவசியம். பாதாம்,, சூரியகாந்தி விதைகள், கீரை ஆகியவற்றில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது.
மூளையை பாதுகாக்க வைட்டமின் சி அவசியம். சிட்ரஸ் நிறைந்த பழங்கள், நாவல் பழம், நட்ஸ் மற்றும் உலர் பழங்கள் ஆகியவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
மூளை ஆரோக்கியத்திற்கு வைட்டமின் பி9 இன்றியமையாதது. பச்சை இலை காய்கறிகள், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில், வைட்டமின் பி9 நிறைந்துள்ளது.
வைட்டமின் பி12 நரம்பு மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத மற்றொரு விட்டமின். பாலாடை கட்டி உள்ளிட்ட பால் பொருட்கள், முட்டை, மீன் உணவுகள், பிற அசைவ உணவுகளில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.