கல்லிரலில் சேரும் நச்சுக்களை நீக்கும் சூப்பர் உணவுகள்!

Vidya Gopalakrishnan
May 10,2024
';

கல்லீரல்

உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவது, ஹார்மோன்களை சீர் செய்வது போன்ற பணிகளை செய்யும் கல்லீரல் உடலின் சுத்திகரிப்பு தொழிற்சாலை எனலாம்.

';

கொழுப்பு கல்லீரல்

கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படிந்து அதன் அளவு பெரிதாகும் நிலை கொழுப்பு கல்லீரல் நோய் என்று அழைக்கப்படுகிறது. கல்லீரல் வீக்கம் அதிகமாகி, பாதிப்படைவதை லிவர் சரோசஸ் என்கிறோம். இதில் இருந்து நிவாரணம் தரக்கூடிய சில உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்வது தீர்வைத் தரும்.

';

எலுமிச்சை

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் அரை மூடி எலுமிச்சம் அப்ழ ஜூஸ் கலந்து தினமும் அருந்து வர கல்லீரலில் இருந்து நச்சுக்கள் வெளியேறும்.

';

பப்பாளி

பப்பாளியில் உள்ள நொதிகள் கல்லீரலில் உள்ள வீக்கத்தை குறைப்பதோடு நச்சுக்களையும் வெளியேற்றுகிறது.

';

ஆப்பிள்

ஆப்பிள் பழம் பெக்டினின் சிறந்த மூலமாக இருப்பதால் இது நமது செரிமான அமைப்பில் உள்ள நச்சுக்களை அகற்றி கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.

';

பீட்ரூட்

பீட்ரூட்டில் காணப்படும் வைட்டமின் சி சத்து, செரிமான நொதி செயல்பாட்டை மேம்படுத்தி, கல்லிரலில் சேரும் கொழுப்பை நீக்க உதவுகிறது.

';

தக்காளி

வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த தக்காளியில் கல்லீரல் ஆரோக்கியத்திற்கான அத்தியாவசிய ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் பொட்டாசியம் உள்ளது.

';

க்ரீன் டீ

க்ரீன் டீயில் கேடசின் ஆல்கஹால் அல்லாத கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கி கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

';

கேரட்

கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கல்லீரல் நோய் ஏற்படுவதை தடுப்பதோடு, நச்சுக்களை நீக்கி ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

';

நெல்லிகாய்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த, நெல்லிக்காய் கல்லீரலின் நச்சுக்களை நீக்கி கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story