யூரிக் அமிலம்

யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் காணப்படும் கழிவு பொருள். ப்யூரின்கள் எனப்படும் இராசயனங்களை உடைக்கும் போது யூரிக் அமிலம் உருவாகிறது.

';

ஹைப்பர்யூரிசிமியா

உடலில் யூரிக் அமிலம் நீண்ட நாட்களுக்கு கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால், ஹைப்பர்யூரிசிமியா என்னும் நிலை உண்டாகலாம். இவை மூட்டுகளில் படிந்து கீல்வாதத்தை உண்டு செய்யலாம். சிறுநீரகத்தில் கற்களையும் உருவாக்கலாம்.

';

மூட்டு வலி

உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் மூட்டு வலி, நிற்பதில் சிரமம், விரல்களில் வீக்கம், மூட்டுகளில் வீக்கம் மற்றும் கால் மற்றும் விரல்களில் கூச்ச உணர்வு, சோர்வு ஆகியவை ஏற்படுகின்றன.

';

ப்யூரின்

ப்யூரின் அளவை குறைக்க செய்யும் உணவுகள் எடுத்துக் கொள்வது யூரிக் அமில பிரச்சனைக்கு தீர்வைத் தரும். அதோடு, ப்யூரின் அதிகம் உள்ள இறைச்சி, பீன்ஸ், ஆல்கஹால் போன்றவறை தவிர்க்க வேண்டும்.

';

ஆரஞ்சு

ப்யூரின் அளவை குறைக்க செய்யும் நீர்ப்பழங்களான ஆரஞ்சு, சாத்துக்குடி, தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் சிறந்த பலன் தரும்.

';

மஞ்சள்

மஞ்சளில் முக்கிய உயிரியக்க கலவையான 'குர்குமின்' பல்வேறு சிகிச்சைக்கு ஆதாரமாக உள்ள நிலையில் மஞ்சள் நீர் யூரிக் அமில அளவையும் குறைக்கிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

';

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, யூரிக் அமிலம் அளவையும் குறைக்கும். ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் யூரிக் அமிலம் இயற்கையாகவே குறையும்

';

காய்கறி

காய்கறிகளில் பூசணிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், செள செள, வெண்டைக்காய், சுரைக்காய் போன்றவற்றை எடுத்துகொள்ளவதும் யூரிக் அமில அளவைக் குறைக்கும்.

';

தண்ணீர்

உடலில் நீர்ச்சத்து குறைந்தாலும் உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்க செய்யலாம். தண்ணீர் குறைவாக குடிக்கும் போது யூரிக் அமிலம் அதிகரிக்கலாம். எனவே தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

';

பால்

குறைந்த கொழுப்புள்ள பால், தயிர், ரொட்டி, பாஸ்தா, உருளைக்கிழங்கு மற்றும் தானியங்கள் போன்றவற்றில் ப்யூரின்கள் குறைவாக உள்ளன.

';

வாதுமை பருப்பு

வாதுமை பருப்புகள் ஒரு சூப்பர்ஃபுட் என அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலில் இருந்து யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவுகிறது.

';

பாதாம்

பாதாம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மூளையை கூர்மைப்படுத்துவதோடு, யூரிக் அமில அளவைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.

';

ஏசல்நட்ஸ்

ஏசல்நட்ஸ்களில் போதுமான அளவு செலினியம் உள்ளது. இது யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

';

ஆளி விதை

ஆளி விதைகளில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ள நிலையில், இதனை உட்கொண்டால், யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தலாம்.

';

VIEW ALL

Read Next Story