இந்த உணவுப் பொருட்களை காலை உணவில் சேர்க்க வேண்டாம் ப்ளீஸ்! சேர்த்தால் என்னவாகும்?

';

வாயுத் தொல்லை

இரவு உணவுக்குப் பிறகு நீண்ட இடைவெளியில் காலையில் உண்ணும் உணவுகள் நமது செயல்பாடுகளை முடிவு செய்கிறது. அதிலும் வாயுத்தொல்லை உள்ளவர்கள், கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய காலை உணவுகளின் பட்டியல் மிகவும் பெரியது. அதில் சில...

';

வெங்காயம்

நார்ச்சத்து அதிகமாக உள்ள வெங்காயத்தை காலையில் பச்சையாக உண்பது வாயுத்தொல்லையை அதிகரிக்கும்

';

வெள்ளரிக்காய்

காலை உணவில் பச்சை காய்கறிகளை தவிர்ப்பது நல்லது. அதிலும் வெள்ளரி போன்ற நார்சத்து மிக்க காயை உண்ணாமல் இருப்பது நல்லது

';

சோளம்

செல்லுலோஸ் கொண்ட சோளம் அதிலும் குறிப்பாக மக்காச்சோளம் செரிமான பிரச்சனைகளைக் கொடுக்கும். அதை தனியாக உண்ணாமல், அரிசி போன்ற மாற்று தானியங்களுடன் சேர்த்து உண்டால் பிரச்சனை இல்லை

';

ஆப்பிள்

தினம் ஒரு ஆப்பிள் உண்டால், மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்வார்கள். இது உண்மை என்றாலும், பிரக்டோஸ் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள ஆப்பிள் உடலில் வாயுவை உருவாக்கும். எனவே காலை உணவாக ஆப்பிள் உண்ண வேண்டாம்,

';

காலிஃப்ளவர்

இலை காய்கறிகளில் உள்ள சிக்கல் நிறைந்த கார்போஹைட்ரேட்டுகள் செரிமானம் ஆவதற்கு நேரம் எடுக்கும் என்பதால் வாயு உற்பத்திக்கு வழிவகுக்கிறது.

';

காபி மற்றும் தேநீர்

பால் சேர்த்த காபி மற்றும் தேநீர், காலை நேரத்தில் தவிர்க்க முடியாத பானங்களாக மாறிவிட்டாலும், அவை வயிற்றில் அமிலத்தின் உற்பத்தியைத் தூண்டுகிறது, இது வாயு உருவாவதற்கு வழிவகுக்கும்.

';

காலை உணவு

காலை உணவு ஆரோக்கியமானதாக இருந்தால், அன்றைய தினம் முழுவதும் உற்சாகத்துடன் வேலை செய்யலாம்

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளவெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story