உடல் பருமன் என்பது பொதுவான பிரச்சனையாக ஆகி விட்ட நிலையில், கொழுப்பை கரைக்க பலர் போராடுகின்றனர்.
பல விதமான முயற்சிகள் எடுத்தும் கூட சிலருக்கு முயற்சிக்கேற்ற பலன் கிடைப்பதில்லை. அதற்கான சில காரணங்களை அறிந்து கொள்ளலாம்.
மைதா உணவுகள் நார்ச்சத்து இல்லாதவை என்பதோடு, ஊட்டச்சத்துக்கள் எதுவுமே இல்லாதாவை. இதனால் செரிமானம் பாதிக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்கும்.
தூக்கமின்மை இருந்தால், உங்கள் வளர் சிதை மாற்றம் என்னும் மெட்டபாலிஸம் பாதிக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
உணவை மென்று மெதுவாக சாப்பிடவில்லை என்றால், உங்கள் வயிறு நிறைந்தது என்ற சமிக்ஞையை மூளை வழங்காது. இதனால், அதிகமாக சாப்பிடுவீர்கள்.
இரவில் உணவை தாமதமாக சாப்பிட்டால் உணவு சரியாக ஜீரணமாகாது. இதன் விளைவாக உடல் எடை அதிகரிக்கும்.
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.