வயசானாலும் ஆற்றல் குறையாமல் இருக்க உதவும் ‘சில’ உணவுகள்!

';

புரதம்

கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு, புரதம் ஆகிய மூன்றும் மேக்ரோநியூட்ரியண்ட்களும் உடலின் வளர்ச்சி, பராமரிப்பு மற்றும் ஆற்றலுக்கு அதிக அளவில் தேவைப்படுகிறது.

';

புரோட்டீன்

உடலில் புரதச் சத்து குறைவதால் உடலில் ஆற்றல் பற்றாக்குறை ஏற்படும், இதனால் சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படும். இந்நிலையில் புரதம் நிறைந்த உணவுகள் உண்பதால், ஆற்றல் குறையாமல் இருக்கும்.

';

பருப்பு

பருப்பு வகைகளில் அதிக அளவு புரதம் காணப்படுகிறது. நீங்கள் ஒரு கப் (198 கிராம்) சமைத்த பருப்புகளில் சுமார் 18 கிராம் புரதத்தைப் பெறலாம். பீன்ஸ், கிட்னி பீன்ஸ், கருப்பு பீன்ஸ், கொத்துக்கடலை போன்றவற்றிலும் நல்ல அளவு புரதம் உள்ளது.

';

குயினோவா

குயினோவா என்பது புரதம் நிறைந்த தானியமாகும், சமைக்கும் போது ஒரு கோப்பைக்கு சுமார் 8 கிராம் புரதம் (185 கிராம்) உள்ளது.

';

சீஸ்

சீஸ் என்னும் பாலடைக்கட்டியில் புரதம் நிறைந்துள்ளது, ஒரு கப் (226 கிராம்) சீஸ் மூலம் சுமார் 28 கிராம் புரதத்தைப் பெறலாம்.

';

கிரேக்க தயிர்

கிரேக்க தயிர் என்பது புரதம் நிறைந்த ஒரு பால் தயாரிப்பு ஆகும். இது 6-அவுன்ஸ் (170 கிராம்) அளவுள்ள கிரேக்க தயிர் சுமார் 15 கிராம் புரதத்தை வழங்குகிறது.

';

மீன் உணவு

மீன்களில் புரதம் நிறைந்துள்ளது, குறிப்பாக சால்மன், டுனா மற்றும் காட் ஆகியவை நல்ல ஆதாரங்களாக உள்ளன. 3.5 அவுன்ஸ் (100 கிராம்) அளவுள்ள மீனில் 20 முதல் 30 கிராம் புரதம் இருக்கும்.

';

சிக்கன் கறி

சிக்கன் கறி சாப்பிட்டால், உங்களுக்கு புரத சத்து மிகுதியாக இருக்கும். கோழி மார்பகத்தில் முட்டையை விட அதிக புரதம் உள்ளது, 3.5 அவுன்ஸ் (100 கிராம்) சிக்கனில் ஒன்றுக்கு சுமார் 31 கிராம் புரதம் உள்ளது.

';

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.

';

VIEW ALL

Read Next Story