மினரல்கள், விட்டமின் A, B, C, சல்பர், பொட்டாசியம் இரும்புச்சத்து நிறைந்த தக்காளியை உணவில் வழக்கமாக சேர்த்துக் கொண்டால் கருவளையங்களுக்கு விடை கொடுக்கலாம்.
92% நீர்ச்சத்துக் கொண்ட தர்பூசணி கண்களுக்கு கீழே உள்ள கருவளையத்தை போக்கும் ஆற்றல் கொண்டது.
வெள்ளரிக்காயை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதோடு வாரங்களுக்கு இருமுறையாவது வட்ட வடிவில் வெட்டப்பட்ட வெள்ளரிக்காயை கண்கள் மீது வைத்துக் கொள்ளலாம்.
ஒமேகா-3 விட்டமின் கே மற்றும் சி கொண்ட ப்ளூபெர்ரி கல் கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கக் கூடியது.
கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் பாதாம் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை போக்கி கண்களை பாதுகாக்கும்.
விட்டமின்கள் சி மற்றும் ஏராளமாக உள்ள ஆரஞ்சு ஜூசை வழக்கமாக உட்கொள்வதன் மூலம் கண்களுக்கு கீழே உள்ள வளையங்களுக்கு குட் பை சொல்லலாம்.
பச்சை காய்கறிகளை அதிகம் உட்கொள்வது, ரத்த ஓட்டத்தை அதிகரித்து கருவம்பாளயங்களை குறைக்கிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.