யூரிக் அமில அளவு அதிகம் உள்ளவர்கள் இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.
யூரிக் அமிலமாக மாற்றப்படும் பியூரின்கள் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் பிற உறுப்பு இறைச்சிகளில் உள்ளன.
மாட்டிறைச்சி ஆட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியில் அதிக பியூரின்கள் உள்ளதால், இவை உடலில் யூரிக் அமில அளவை அதிகரிக்கின்றன.
கடல் உணவுகளில் பொதுவாக பியூரின்களின் அளவு அதிகமாக இருக்கும். ஆகையால் யூரிக் அமில நோயாளிகள் இவற்றை தவிர்க்க வேண்டும்.
அதிக ஃப்ருக்டோஸ் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. இவை யூரிக் அமில அளவை அதிகரிக்கும்.
மதுபானம் அருந்துவதாலும் யூரிக் அமில அளவு அதிகரிக்கலாம். குறிப்பாக பீர், ஸ்பிரிட் மற்றும் வைனில் அதிக யூரிக் அமிலம் உள்ளது.
அதிக சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உள்ள உணவுகள் யூரிக் அமில அளவுகளை அதிகரிக்கும்.
அதிகப்படியான சர்க்கரை சேர்க்கப்பட்ட பழச்சாறுகள் மற்றும் சாஃப்ட் ட்ரிங்க்ஸ் யூரிக் அமில அளவை அதிகரிக்கும்.