படுத்தி எடுக்கும் யூரிக் அமிலத்தை விரட்டி அடிக்கும் மாஸ் உணவுகள்

';

உலர் பழங்கள்

பியூரின்கள் குறைவாகவும், ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் ஆண்டி ஆக்சிடெண்டுகள் அதிகமாகவும் உள்ள பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்ற உலர் பழங்கள் மற்றும் ஆளி விதை போன்ற விதைகளை யூரிக் அமில நோயாளிகள் உட்கொள்ள வேண்டும்.

';

ஓட்ஸ், பார்லி மற்றும் பிரவுன் ரைஸ்

ஓட்ஸ், பார்லி மற்றும் பிரவுன் ரைஸ் போன்ற முழு தானியங்களில் நார்ச்சத்து அதிகமாகவும், பியூரின் குறைவாகவும் இருப்பதால், யூரிக் அமில அளவைக் குறைப்பதற்கு அவை சிறந்த தேர்வாக இருக்கும்.

';

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரி போன்ற பெர்ரிகளில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை யூரிக் அமில அளவைக் குறைக்கவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும்.

';

ஆப்பிள்

ஆப்பிளில் உள்ள மாலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து உடலில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவும்.

';

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பியூரின்கள் குறைவாக இருப்பதோடு இவற்றில் பொட்டாசியமும் உள்ளது. இவை யூரிக் அமிலத்தை விரைவாக வெளியேற்ற உதவும்.

';

ஓமம்

ஓமம் மற்றும் ஓம நீர் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தி கீல்வாத வலியையும் குறைக்க உதவுகின்றது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story